Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த முள்ளங்கி சட்னி செய்ய...!

Updated: புதன், 27 மார்ச் 2019 (15:39 IST)
பெரிய வெங்காயம் - 3
தேங்காய் - கால் மூடி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
முள்ளங்கியை பொடியாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.
வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,  உளுத்தம்பருப்பு, சீரகத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.
 
பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்கள். அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும். கடைசியாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்  கொட்டவும். சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

எல்லாம் காட்டு

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments