வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 30 ஜனவரி 2016 (14:58 IST)

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையான பொருட்கள் :
 
ப‌ச்சை கறிவேப்பிலை - 1 கப்
கா‌ய்‌ந்த மிளகாய் - 7
உ. பருப்பு - 1 மேஜைக்கரண்டி
புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - வறுக்க, தாளிக்க தேவையான அளவு
கடுகு, உ.பரு‌ப்பு, பெரு‌ங்காய‌ம் - தா‌ளி‌க்க 
வெந்தயம் - 1 தேக்கரண்டி
 
செய்முறை :
 
ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி கா‌ய்‌ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அதனுட‌ன் அல‌சி வை‌த்‌திரு‌க்கு‌ம் கறிவேப்பிலையை சேர்த்து ஒரு தடவை வதக்கி உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
 
புளியைத் தண்ணீரில் ஊற வை‌த்து‌க் கரைச‌ல் எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். பின் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு பிறகு வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
 
‌பி‌ன்ன‌ர் பு‌ளி கரைசலை ஊ‌ற்‌றி அ‌தி‌ல் அரைத்த விழுதை சேர்க்கவும். கெட்டியான குழம்பு பதத்திற்கு கொதிக்க வைக்கவும். இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். மேலும் சாதத்துடனும் பரிமாறலாம்.