சத்துக்கள் நிறைந்த கேரட் கீர்


Sasikala| Last Updated: புதன், 9 டிசம்பர் 2015 (13:20 IST)
இயற்கை உணவு உண்டு வாழும் பொழுது நமது உடலிலுள்ள செல்கள் வளர்சிதை மாற்றம் அடைவதை நன்கு உணரலாம்.

 

 
சமைக்காத இயற்கை உணவுகள் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் வேலைப் பளுவைக் குறைக்கிறது. சமைத்த உணவு உண்டு வாழும் போது, நமது உடலிலுள்ள செல்கள் தேய்சிதை மாற்றம் அடைவதையும் உணரலாம்.
 
மனிதனுடைய உடலில் செய்ய வேண்டிய பலவிதமான அறுவைச் சிகிச்சைகளை இயற்கை உணவு உண்பதால் தவிர்த்து விடலாம்.
 
செய்முறை:
 
கேரட்டை துருவலாக துருவி மிக்ஸியில் ஆட்டிச் சாறு எடுத்து கொள்ள வாண்டும். அத்துடந்தேங்காய்ப்பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். வாசனைக்காக ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.
 
அளவு:
 
ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு கேரட் 500 கிராம், பெரிய தெங்காய் 1, நாட்டுச் சர்க்கரை 100 கிராம், ஏலக்காய் 10, பச்சைக் பற்பூரம் 4 சிட்டிகை.


இதில் மேலும் படிக்கவும் :