இனி கேரட்டில் செய்திடலாம் சட்னி - சுவையான கேரட் சட்னி

இனி கேரட்டில் செய்திடலாம் சட்னி - சுவையான கேரட் சட்னி


Sasikala|
ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா? கவலை வேண்டாம். இனி செய்திடலாம் சத்தான, சுவை மிகுந்த கேரட் சட்னி.

 
 
தேவையான பொருட்கள்:
 
கேரட் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 3 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
கடுகு, உளுந்து - தாளிக்க
எண்ணெய் - தேவையான அளவு
 
செய்முறை:
 
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைச் வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், புளி எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.
 
கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் அதே வாணலியில் போட்டு 5 நிமிடங்கள் வரை வதக்குங்கள். வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் நன்றாக அரைத்து கொள்ளவும்.
 
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்த கேரட் சட்னியில் கொட்டி 2 நிமிடம் வதக்கி இறக்கிவிடவும். 
 
சத்து மிகுந்த கேரட் சட்னியை அனைவரும் சுவைத்து மகிழுங்கள். இவை இட்லி, தோசையுடன் சாப்பிட சிறந்தது.


இதில் மேலும் படிக்கவும் :