வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (11:07 IST)

பிரட் உப்புமா

தேவையான பொருட்கள் :
 
சால்ட் பிரட் - 10 ரொ‌ட்டி 
எலுமிச்ச‌ம் சாறு - 1 தே‌க்கர‌ண்டி
மஞ்சள் பொடி - அரை தே‌க்கர‌ண்டி 
கடுகு - அரை தே‌க்கர‌ண்டி
க.பருப்பு - அரை தே‌க்கர‌ண்டி
உ.பருப்பு - அரை தே‌க்கர‌ண்டி
முந்திரி உடைத்தது - 3 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் (அ) நெய் - 3 தே‌க்கர‌ண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - 1 சிட்டிகை
பச்சை மிளகாய் - 4
                                                                                                     கருவேப்பிலை - 1 கொத்து
                                                                                                 பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
 
முதலில் ரொ‌ட்டி து‌ண்டுகளை நான்காகப் பிய்த்து மிக்ஸியில் போட்டு முதல் ஸ்பீடில் ஒரு சுற்று சுற்றவும். நன்றாக பஞ்சு போல் தூளாகி விடும். பிறகு வாணலியை அடுப்பி‌ல் வை‌த்து சூடாக்கி எண்ணெய் அல்லது நெய் விடவும். சூடானதும் கடுகைப் போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம்.
 
‌பி‌ன்ன‌ர் பருப்பு வகைகளைச் சேர்த்து பொன்னிறமானவுடன், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து (கொத்துமல்லி தவிர) மேற்சொன்ன பொருள்களை பிரட் தூளுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 
 
ரொ‌ட்டி உ‌ப்புமாவை தட்டில் பரப்பி கொத்துமல்லி தூ‌வி தூவி அலங்கரிக்கவும்.