வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

பாகற்காய் குழம்பு

அறுசுவைகளில் இதுவும் ஒன்று. பாகற்காயை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் விரவில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.


 

 
தேவையான பொருட்கள்:
 
பாகற்காய் - 3
துவரம் பருப்பு - அரை கப் (வேக வைத்தது)
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - 2
கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
தனியா - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஒரு ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 3 துண்டுகள்
வெல்லம் - சிறிது பாதி எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - ஒரு கீற்று
 
தயார் செய்து கொள்ள வேண்டியவை:
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றலை தனியாக வறுத்துக் கொள்ளவும். 
 
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
 
செய்முறை:
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாகற்காயை போட்டு வதக்கவும். அதில் புளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து மிளகாய் வாடை அடங்கியதும் பருப்பு கலவையுடன் கலந்து வைத்திருக்கும் விழுதினை ஊற்றவும்.
 
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். இறக்கும் நேரத்தில் சிறிது வெல்லம் சேர்க்கவும். நன்கு திக்காக ஆனதும் இறக்கவும்.
 
அருமையான சுவை மிகுந்த பாகற்காய் குழம்பு தயார்.