1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala

வாஸ்து தவறால் ஏற்படும் பாதிப்புகள் என்ன...?

வாஸ்து என்பது நாம் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளில் ஒன்றாகவே ஆகி விட்டது. நாம் ஒரு வீடோ, அல்லது பிற பயன்பாட்டிற்காக ஒரு கட்டிடம் கட்டும்போதோ வாஸ்து பார்த்து கட்டுவதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். 

உதாரணமாக நாம் வீடு கட்டுவதற்கு வட்டிக்கு பணம் வாங்கி இருந்தோம் என்றால் வாஸ்து தவறால் அந்த கடனை நம்மால் கட்டவே முடியாது. மேலும் அந்த  வீட்டில் உள்ளவருக்கு திருமணத்தடைகள், அப்படியே திருமணம் நடந்தாலும் அந்த திருமணத்தின் போது சொல்ல முடியாத மனக்குழப்பங்கள் ஏற்படும். மேலும்  குடும்பத்தில் தீர்க்க முடியாத பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
 
வாடகை வீட்டில் இருந்த போது ஆரோக்கியமாக இருந்த நபர் சொந்த வீட்டிற்கு வந்த பின்னர் நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிடுவார். இதற்கு காரணம் வாஸ்துதான். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவர்களுடைய  சுமூகமான தினசரி நடைமுறை வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படும்.

நீங்கள் குடியிருக்கும் வீடே உங்களது ஆரோக்கியத்தையும், வருமானத்தையும்,  வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. வீட்டின் எந்த திசை பாதிக்கப்பட்டால் எந்த நோய் வரும் என்று தெரிந்து கொள்ளலாம்.
 
வாஸ்துத் தவறால் மேலும் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் இல்லாமை, உடல் உபாயம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்க்கவே நாம் ஒவ்வொருவரும் முறைப்படி வாஸ்துப் படி கட்டுவது அவசியமான ஒன்றாக ஆகிவிட்டது.
 
வீடு அமைப்பில் தவறு இருக்கும் பட்சத்தில், அந்த தவறான அமைப்புக்கு உண்டான நோய் ஏற்படும். வாஸ்து கோளாறுகளை சரி செய்தால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வாஸ்து நன்றாக இருப்பது பண வருமானத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியம். 
 
தெற்கில் அதிக காலி இடம், பள்ளங்கள் அந்த வீட்டில் உள்ள பெண்களை பாதிக்கும். மேற்கில் அதிக காலி இடம் இருந்தால் அந்த வீட்டின் ஆண்களை பாதிக்கும்.