வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By

வீட்டின் வாஸ்து தோஷத்தை சரிசெய்யும் மந்திரம்...!

வீட்டின் கன்னி மூலையில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நாம் இறைவனை வணங்கி சரி செய்துவிடலாம். அதே போல் மந்திரம் உச்சரித்தும், தோஷத்தை நீக்கிவிடலாம். வீட்டில் தோஷம் ஏற்பட்டால், மனதுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும் என்று பெரியோர்கள்  கூறுவார்கள்.
வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல பிரச்சனை ஏற்படுகிறது. இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று ஒரே குழப்பம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது.
 
பரிகாரங்களை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
 
மந்திரம்:
 
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
 
வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது தெரியவந்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூறி வந்தால், வாஸ்து  தோஷம் நீங்கிவிடும்.