புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (17:02 IST)

வாஸ்து சாஸ்திரப்படி இதனை செய்தால் யோகம் தரும்!

கடலில் இருந்து எடுத்த கிரிஸ்டல்களை (கிளிஞ்சல்) அதிக நேரம் வசிக்கும் அறையில் வைத்தால் எதிர்மறையாக எண்ணங்கள் மறையும். கிழக்கு பக்கமுள்ள அறையில் அதிக நேரம் வசிப்பதால் முக அழகு கூடும். கவர்ச்சியும் தரும். 

 
* நான்கு பக்கமும் ஒரே அளவாக சதுரமாக இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு உடல்நலம் தரும். உதாரணம்-எகிப்தில்  உள்ள பிரமிடுகள் சதுரமானவை. 
 
* மேற்கு பகுதி உயரமானால் மேன்மை தரும். கடின உழைப்பு, தியாக மனப்பான்மை, ஆராய்ச்சி செய்யும் அறிவு, விஞ்ஞான கண்ணோட்டம், உயர்நிலை பெரும் யோகம் இவைகளை தரும். 
 
* சூரியனின் ஒளிக்கதிகள் வீட்டின் எப்பகுதிகளிலாவது விஉழும்படி சன்னல், கதவுகளை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான்  வீட்டில் வசிப்பவர்களுக்கு நோயின் எதிர்ப்பு சக்தி கூடி வரும். கிருமிகளால், பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பு குறையும். 
 
* வீட்டின் சுற்றுப்புற சுவரின் மூலையில் எவ்விதமான கட்டிடமும் கட்டக்கூடாது. முக்கியமாக வடகிழக்கு, தென்மேற்கு மூலைகளை இணைத்து சிறிய கூடமோ கழிப்பறையோ கட்டக்கூடாது. அவ்விதம் கட்டினால் அந்த வீட்டின் உரிமையாளர்  அதில் வசிக்க இயலாது. வாடகைக்கு விடும் சூழ்நிலை ஏற்படும்.