செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (21:17 IST)

வாஸ்து: குழந்தைகள் படிக்கும் அறை அமைக்கும் முறை

இன்றைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். 


 
எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள். 
 
ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் . 
 
இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும். 
 
குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும். இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது. 
 
மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.