1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
  4. Is it possible to become rich by following some Vastu system...?

சில வாஸ்து முறையை பின்பற்றுவதால் பணக்காரர் ஆக முடியுமா...?

வாஸ்து
வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம்.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். 
 
சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே  பயன்தரும். 
 
பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும்  நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. 
 
உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும்.
 
எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும். 
 
உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். 
 
உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி  செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
About Writer
Sasikala