ராசி நட்சத்திரம் பார்த்து வாசல் அமைப்பது நல்லதா...?
ஒவ்வொரு நட்சத்திரகாரர்களுக்கும் ஒரு திசை உகந்ததாக இருக்கும் என்கிறார்கள் சில வாஸ்து நிபுணர்கள். உண்மையில் வாஸ்து பார்க்கும் போது ராசி, நட்சத்திரம் போன்றவற்றைப் பார்க்க வேண்டியதில்லை என்பதே உண்மை.
ஒரே வீட்டில் பல ராசிக்காரர்களும் நட்சத்திரகாரர்களும் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாசல் வைப்பது எங்ஙனம் சாத்தியமாகும்? குடும்பத் தலைவரின் ராசி நட்சத்திரம் பார்த்து தேர்தெடுப்பதும் தவறு தான்.
எந்த திசைப் பார்த்த வீட்டு மனையையும் வாங்கலாம். பாதகமில்லை. வடக்குப் பார்த்த மனையும் கிழக்குப் பார்த்த மனையும் விசேஷம். எந்த திசையில் வேண்டுமென்றாலும் வாசல் இருக்கலாம். தப்பில்லை. என்ன கவனிக்க வேண்டுமென்றால் கிழக்கில் வாசல் வைப்பதாக இருந்தால் வடக்கு சார்ந்த கிழக்கில் வைக்க வேண்டும்.
வடக்கில் வாசல் வைப்பதாக இருந்ததால் கிழக்கு சார்ந்த வடக்கில் வைக்கவும். தெற்கு என்றால், கிழக்கு சார்ந்த தெற்கு, மேற்கு என்றால், வடக்கு சார்ந்த மேற்கு என்று தேர்ந்தெடுக்கவும்.
ராசிக்கு வாயில் என்பதனை விட நல்ல திசையை பார்த்து இருக்கக்கூடிய வகையில் வாயில் வைப்பது தான் சாலச்சிறந்தது.ராசிக்கு வாயில் என்கிற விஷயத்தை இரண்டாம் பட்சமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆக வீட்டில் நான்கு ஐந்து நபர்கள் இருப்போம். இந்த நான்கைந்து பேர்களில் எந்த ராசியில் யாருக்கு வைத்தால் சிறப்பு என்ற தேவையில்லாத குழப்ப நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். ராசிக்கு வாயில் என்பது எனது அனுபவ அறிவின் படி இரண்டாம் பட்சம் தான்.