கல் உப்பை வைத்து பிரச்சனைகளுக்கு பரிகாரம் செய்வது எப்படி...?

crystal Salt
Sasikala|
அதிகாலை எழுந்தவுடனே இரண்டு கையில் கல் உப்பை வைத்து மூடி, கிழக்கு பார்த்து உட்கார வேண்டும். மடியில் ஒரு ஒயிட் பேப்பர்  வைத்துக்கொள்ளவேண்டும்.
உதாரணமாக மாமியாரால் பிரச்சனை இருந்தால், கண்ணை மூடிக்கொண்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்க சந்தோஷமாக இருக்கிறோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிந்துக்கொண்டேன். என் மேல் அவங்களுக்கு ரொம்ப  பாசம் என திரும்பத் திரும்ப சொல்லவேண்டும்.
 
அதேபோல, பணப்பிரச்சனைக்கும் இதே முறையில் சொல்லவேண்டும். உடம்புல ஏதாவது பிரச்சனை இருந்தாலும், எனக்கு எந்த நோயும்  இல்லை, உடம்பபில் இருக்கிற பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்லவேண்டும்.
 
மனசுக்குள்ளேயும் அல்லது வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிடம் சொன்னால் போதும். முடிந்ததும் கையில் உள்ள உப்பை மடியில்  வைத்துள்ள ஒயிட் பேப்பரில் போட்டு மடித்து ஓடுகிற தண்ணீரில் அல்லது சிங்கில் கரைத்து விடலாம்.
 
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை “Ora Science”என்று சொல்வாங்க! எதிர்மறை சக்தி, நேர்மறை சக்தி இது இரண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றுகிற  சக்தி கொண்டது. மேலும் உடம்பில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :