புதன், 13 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:25 IST)

வீட்டின் எந்தத் திசையில் காலியிடம் இருக்கலாம்? : வாஸ்து

கேள்வி : வீட்டில் குறிப்பிட்ட திசையில் காலியிடம் இருக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்? ஆனால் வேறு சிலர் குறிப்பிட்ட திசையில் இடம் காலியாக இருந்தால்தான் வீடு சுபிட்சமாக இருக்கும் என்று அறிவுறுத்துகின்றனர்? வீட்டில் காலியிடம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா?


 
பதில்: பொதுவாக வடகிழக்கு எனப்படும் ஈசானிய மூலையில் காலியிடம் இருக்கலாம். அதில் தவறில்லை. அதற்கடுத்தபடியாக, வடமேற்கு திசையை ஓரளவு காலியாக வைக்கலாம். ஆனால் முழுமையாக காலியாக விடக்கூடாது.  
 
தென் திசை எப்போதுமே அதிக சுமைகளுடன் முழுமையாக இருப்பது நல்லது. ஆனால் வடக்கு திசையையும் ஓரளவு காலியாக இருக்கலாம். வடமேற்கு அறையில் வடகிழக்கு பகுதியை காலியாக வைத்துக் கொள்வதும் நல்ல பலனை அளிக்கும்.