வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விளக்கின் முகங்களும் அதன் பலன்களும்...!!

திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. இறைவனின் அருளை வெகு விரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே. தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி ஏற்ர பலன்களை தருகின்றன.
கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது. தீபங்களே கர்ம வினைகளை நீக்க்ககூடியவை. தெய்வங்களின் அமைதிபடுத்தக்கூடியவை.
 
விளக்கின் முகங்களும் அதன் பலன்:
 
1. ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
 
2. இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்.
 
3. மூன்று முகம் ஏற்றினால் - புத்திர தோஷம் நீங்கும்.
 
4. நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
 
5. ஐந்து முகம் ஏற்றினால் - சகல நன்மைகளும் உண்டாகும்.
 
எந்த விளக்கில் ஏற்றினால் என்ன பலன்:
 
* மண் அகல் விளக்கு - பீடைகள் விலகும்.
 
* வெள்ளி விளக்கு - திருமகள் அருள் உண்டாகும்.
 
* பஞ்ச உலோக விளக்கு - தேவதை வசியம் உண்டாகும்.
 
* வெங்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்.
 
* இரும்பு விளக்கு - சனி தோஷம் விலகும்.
 
விளக்கேற்றும் காலம்:
 
* விளக்கேற்றும் காலம் காலை - 4:30 மணி முதல் 6:00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)
 
* விளக்கேற்றும் காலம் காலை - 4:30 மணி முதம் 6:00 மணி வரை (தினப்பிரதோஷம்).