டிப்ஸ் - பெண்களுக்காக
சில பொருள்களை நாள்பட வைத்திருந்தால் அவை எளிதில் கெட்டு விடும். அவற்றை பாதுகாக்க சில டிப்ஸை கையாள்வது அவசியம்.
1. மாங்காய் பச்சடி செய்யும் பொழுது தோலை சீவிவிடுவார்கள். ஆனால் தோல் சீவாமல் அப்படியே செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
2. இஞ்சி கெடாமல் ப்ரெஷாக இருக்க ஒரு சின்ன பாத்திரத்தில் மணலை போட்டு அதில் தண்ணீரை ஊற்றவும். அந்த ஈரமணலில் இஞ்சியை புதைத்து வைத்தால் நீண்ட நாட்கள் இஞ்சி வாடாமலும், கெடாமலும் இருக்கும்.
3. ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும்.
4. சமையலறை டைனிங் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு குவலை நீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.
5. சுக்கு, ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொண்டால் டீ போடும்போது அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.
6. வீட்டில் பல்லிகள் நடமாடும் இடத்தில் நாப்தலின் (ரசகற்பூரம்) ஒன்றிரண்டை போட்டு வைத்தால் பல்லி பற்றிய பயமின்றி நிம்மதியாக வீட்டு வேலைகளைக் கவனிக்கலாம்.
7. கவரில் உள்ள வெண்ணெயை எடுக்க அதை அப்படியே பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து, பின் எடுத்தால் கையில், கவரில் வெண்ணெய் ஒட்டவே ஒட்டாது.