புதிதாக வாங்கும் பொருட்கள்
புதிதாக எந்தப் பொருளை வாங்கினாலும் அதில் ஒரு வாடை வரும். அதனைப் போக்க எளிதான வழிகள் உள்ளன.
புதிதாக வாங்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பிளாஸ்டிக் வாடை இருக்கும். வெதுவெதுப்பான சுடுநீரும் உப்பும் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து கழுவி விட்டு பிறகு சுடுநீர் கொண்டு கழுவினால் பிளாஸ்டிக் வாடை இருக்காது.
புதிதாக வாங்கும் பாத்திரங்களை சோப்பு பவுடர் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து பின்னர் சிறிது நேரம் கழித்து துலக்கினால் நல்லது.