பூச்சி பிடிக்காமல் இருக்க
வீடுகளை சுத்தமாக வைக்க இல்லத்தரசிகள் நாள் தோறும் புதியதொரு முயற்சியை மேற்கொண்டு வருவர். என்னதான் புதிய முயற்சிகளை கையாண்டு வந்தாலும் வீட்டில் பூச்சிகளின் தொல்லை தீர்ந்தபாடில்லை. அவற்றை தவிர்க்க சில வழிமுறைகள்.
அரிசியில் சிறிது உப்புத் தூளை போட்டு வைத்தால் பூச்சி பிடிக்காது.
கதவு, ஜன்னல்கள் அழுக்குகளானால் சோப்புத்தூள் கரைசலில் நனைத்த துணியால் துடைத்துவிட்டால் போதும். தண்ணீர்ஊற்றி கழுவ வேண்டிய அவசியம் இல்லை.