வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. ‌வீ‌ட்டு‌க் கு‌றி‌ப்பு
Written By Sasikala

வீட்டில் இரு்க்கும் பொருட்களை பாதுகாப்பதற்கான டிப்ஸ்

1. கடையிலிருந்து பிளாஸ்டிக் கவரில் வெண்ணெய் வாங்கி வந்தால் அப்படியே ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து,  பின் எடுத்தால் கையில், கவரில் வெண்ணெய் ஓட்டவே ஓட்டாது. 


 
 
2. ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும்.  உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றாலும் உடனே எளிதாகச் செய்துவிடலாம்.
 
3. தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸாக அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் (உப்பு, மிளகாய்ப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு பின் ஆற வைத்து), தக்காளி சாஸாகவும்  பயன்படுத்திக் கொள்ளலாம். தக்காளி இல்லாத சமயத்தில் சாம்பார், ரசத்திற்கும், கிரேவிகள் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
4. சுக்கு, ஏலக்காயைப் பொடி செய்து வைத்துக் கொண்டால் டீ போடும்போது அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.
 
5. இடியாப்பமாவு, பூரண கொழுக்கட்டைமாவு பிசையும் பொழுது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டு கிளறினால் நல்ல வெள்ளையாக இருக்கும்.
 
6. மாங்காய் இனிப்பு பச்சடி செய்யும் பொழுது தோலைச் சீவிவிடுவார்கள். ஆனால் தோல் சீவாமல் அப்படியே செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
 
7. தினமும் இரவு பால் அருந்தும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம், ஏலக்காய் சேர்த்து கொதிக்கவிட்டு அருந்தினால் இரும்புச்சத்து சேரும். சுவையும் நன்றாக இருக்கும்.
 
8. கொத்தமல்லி, புதினா, பூண்டு துவையல், சாம்பார் செய்யும் போது புளி நிறைய சேர்க்காமல் தக்காளியைச் சேர்க்கலாம். ரசத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். உடலுக்கும் நல்லது. புளி அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளையும்.
 
9. வாரம் ஒருமுறை இஞ்சியையும், பூண்டையும் தனிதனியாக அரைத்து விழுதாக ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் சைவ பிரியாணி மற்றும் அசைவ பிரியாணி செய்யும் பொழுது எளிதாக இருக்கும்.
 
10. நூடுல்ஸ் செய்யும்பொழுது வெங்காயம், தக்காளி வதக்கும்போது சிறிது மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த் தூளையும் அதில் உள்ள மசாலாவோடு சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.