வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 18 நவம்பர் 2018 (14:46 IST)

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, ஏற்கனவே அவர் கணவர் உடல்நலம் இல்லாதபோதும், மரணம் அடைந்தபோதும் என இரண்டு முறை பரோலில் வந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரோலில் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் ஆறுமுகச்சாமி ஆணையத்திடம் சமீபத்தில் சசிகலா பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில் உள்ள சில தகவல்கள் தவறாக இருப்பதாக ஆணையம் உறுதி செய்துள்ளதால் இதுகுறித்து சசிகலாவிடம் விசாரணை செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.

சசிகலாவிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலமோ அல்லது பரோலில் அவரை சென்னைக்கு வரவழைத்தோ அல்லது ஆணையத்தின் அதிகாரிகள் பெங்களூர் சிறைக்கு சென்றோ விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. சசிகலாவை பரோலில் சென்னைக்கு வரவழைத்து விசாரணை செய்யவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் மீண்டும் ஒருமுறை சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.