திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (18:16 IST)

இயக்குனர் வெற்றிமாறன் மீது போலீஸ் தடியடி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிரஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் வெற்றி மாறன், களஞ்சியம் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது.


 
சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்று அரசியல் கட்சிகளும், போலீஸ் பாதுகாப்புடன் திட்டமிட்டபடி நடத்தியே தீருவோம் என்ற ஐபிஎல் நிர்வாகமும் கூறியுள்ளது.
 
இந்த நிலையில் சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியை தடை செய்யக்கோரி விசிகவினர் திருவல்லிக்கேணியில் இருந்து மைதானத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பதட்டநிலை உருவாகியுள்ளது. 
 
மேலும் சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பாரதிரஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை சார்பாக போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றி மாறன் மீதும்  தன் மீதும் போலீசார் தடியடி நடத்தியதாக களஞ்சியம் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.