1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 டிசம்பர் 2017 (16:08 IST)

பதவிக்கு வந்த பின்தான் ஆசைப்பட்டு ஏமாந்து போனேன் - வெங்கையா நாயுடு

உடல் எடையைக் குறைக்க ஆசைப்பட்டு போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து போனதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புலம்பியுள்ளார்.

 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் போலி விளம்பரங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. அதில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு போலி விளம்பரத்தால் தான் ஏமாந்து போன அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
 
துணை ஜனாதிபதி பதவிக்கு வந்த பின் ஒருநாள் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் உடல் எடையை குறைக்கும் மாத்திரை சாப்பிட்டால் உறுதியாக உடல் எடை குறையும் என்று கூறப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டு, வெங்கையா நாயுடு உடனடியாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
 
அப்போது ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மாத்திரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என் கூறியுள்ளனர். இவர் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மாத்திரைகளுக்கு பதில் இ-மெயில் மட்டுமே வந்துள்ளது. அதில், வேறொரு மாத்திரை வாங்கிக்கொள்ளுங்கள் அதுவும் ஆயிரம் ரூபாய்தான். ஆனால் விரைவாக உடல் எடை குறையும் என குறிப்பிட்டு இருந்துள்ளது.
 
இதனையடுத்து சந்தேகம் அடைந்த வெங்கையா நாயுடு விசாரித்ததில், அந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்தது இல்லை அமெரிக்காவை சேர்ந்தது என்று தெரிந்துள்ளது. இதுபோன்ற போலி விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றாத வகையில் கடுமையான சட்டங்களும், போலி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.