செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (08:02 IST)

சின்மயி-வைரமுத்து விவகாரம்: நடிகர்களின் மெளனம் ஏன்? தமிழிசை கேள்வி

கடந்த சில நாட்களாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் திடுக்கிடும் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சின்மயிக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகினர்களின் ஆதரவு கிடைத்து வந்தாலும் இன்னும் இதுகுறித்து பெரிய நடிகர்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சின்மயி விஷயத்தில் பெரிய நடிகர்கள் மெளனமாக இருப்பதை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அரசியல்வாதிகள் தவறு செய்தால் உடனே கண்டித்து அறிக்கை விடும் கமல்ஹாசன் உள்பட பல திரையுலகினர், வைரமுத்து மீது ஒரு பெண், அதிலும் பிரபலமான பாடகி குற்றஞ்சாட்டியபோதிலும் அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியது என நடிகர்களை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.