செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 4 அக்டோபர் 2018 (09:34 IST)

விஜய்க்கு மாலை போட்டு வரவேற்க தயார்! ஆனால்....பொன்.ராதாகிருஷ்ணன்

ரஜினிகாந்த், கமல்ஹாசனை அடுத்து நடிகர் விஜய்யும் கிட்டத்தட்ட தனது அரசியல் ஆசையையும், முதல்வர் கனவையும் சமீபத்தில் நடந்த 'சர்கார்' ஆடியோ விழாவில் வெளிப்படுத்திவிட்டார். விஜய்யின் அரசியல் பேச்சுகுறித்துதான் கடந்த இரண்டு நாட்களாக செய்தி தொலைக்காட்சிகள் விவாதம் நடத்தி வருகின்றன.

விஜய்யின் அரசியல் கருத்துக்கு ஆளும் கட்சி கண்டனமும், ஒருசில கட்சிகள் வரவேற்பும் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'நடிகர் விஜய் ஊழல்வாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு சொன்னால் அவரை மாலை போட்டு வரவேற்க தயார். ஆனால் அதே நேரத்தில் அனைவராலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவாக ஆக முடியாது. மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய்யும் கடந்த சில வருடங்களாக அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாக மறைமுகமாக தெரிவித்து வருகிறார். உண்மையில் அரசியலில் அவர் இறங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்