வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 22 ஜூன் 2018 (12:22 IST)

காவலரைத் தாக்கிய நாம்தமிழர் மதன்குமார் குண்டர் சட்டத்தில் கைது

காவலரைத் தாக்கிய மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் சீருடை அணிந்த காவலரை அடித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
 
சமீபத்தில் காவலரைத் தாக்கிய எண்ணூரைச் சேர்ந்த மதன்குமாரை திருவெல்லிக்கேனி காவல் துறையினர் கைது செய்தனர். மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.