திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (10:22 IST)

திமுக எம்.எல்.ஏக்களுக்கு கிடைத்த ரு.6.5 லட்சம்: தினகரன் மட்டுமே பிடிவாதம்

சமீபத்தில் தமிழக எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. ரூ.55 ஆயிரமாக இருந்த எம்.எல்.ஏக்களின் சம்பளம் ரூ.1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் சம்பளம் உயர்த்தப்பட்ட போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து கொண்டிருந்ததால் இந்த சம்பள உயர்வு தங்களுக்கு தேவையில்லை என திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று திமுக எம்.எல்.ஏக்கள் இந்த கடிதத்தை சட்டமன்ற செயலாளரிடம் இருந்து திரும்ப பெற்றதால் திமுக எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த 2017 ஜூலை, 1 முதல் வழங்க வேண்டிய நிலுவை தொகை, தலா, ரூ.6.50 லட்சம் திமுக எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்பட அனைவருக்கும் இந்த நிலுவை தொகை வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது

எனினும் சம்பள உயர்வு வேண்டாம் என்ற முடிவில் இன்னும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் மட்டும் உறுதியாக இருப்பதால் அவர் பழைய சம்பளத்தையே வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.