புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (08:54 IST)

திவாகரன் தொடங்கிய புதிய கட்சி: தினகரனுக்கு போட்டியா?

கடந்த சில நாட்களாக சசிகலாவின் உறவினர்களான தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென திவாகரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
 
தினகரன் இன்னும் ஆறு மாதங்களில் தனிமரமாகிவிடுவார் என்றும், அதிமுகவின் பெரும்பான்மையோர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் இருப்பதாகவும் சமீபத்தில் திவாகரன் பேட்டியளித்தார். இதனால் அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திவாகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது.
 
இந்த நிலையில் நேற்று திடீரென மன்னார்குடியில் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் திவாகரன். தினகரனின் அமமுக கட்சிக்க்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்று திவாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அம்மா அணி என்ற புதிய கட்சியில் தலைமை அலுவலகத்தை மன்னார்குடியில் திறந்து வைத்த திவாகரன், 'அம்மா அணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்தார்.