1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (21:15 IST)

சீமானின் சொத்து மதிப்பு விவரம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொத்து மதிப்பு விவரங்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், அவர் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 
 
அப்போது, வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு மற்றும் வழக்குகள் குறித்த விவரங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
அதன்படி, அவரது கையிருப்பாக ரூ.40ஆயிரமும், வங்கிகளில் பல்வேறு இருப்புகளாக ரூ. 81,176 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சீமானிடம் ரூ.26.50 லட்சம் மதிப்பில் ஒரு காரும், ரூ.4.50 லட்சம் மதிப்பில் மற்றொரு காரும் இருப்பதாகவும், ஒரு சில தங்க நகைகள் இருப்பதாகவும், இவைகளின் மொத்த மதிப்பு ரூ.35,36,177 என்றும் தெரிவிக்கப்பட்ருந்தது.
 
இந்நிலையில், அசையாச் சொத்துக்களான வீடு, நிலம் உள்ளிட்டவை ஏதும் இல்லை என்றும், தனியார் வங்கியில் ரூ.8.97 லட்சம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தன்மீது 3 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அந்த தொகுதியில் சீமானுக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளவர் அவரது மனைவி கயல்விழி.
 
இவரிடம் கையிருப்பாக ரூ.35 ஆயிரம், பத்திரங்களில் முதலீடாக ரூ.80 ஆயிரம், வங்கிகளில் இருப்பாக ரூ.55ஆயிரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன், ரூ.16லட்சம் மதிப்புள்ள கார், 160 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.52,25,031 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அசையா சொத்தாக நிலம், வீட்டுமனையாக ரூ.29 லட்சம் மதிப்பிலான சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.81.25 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.