ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 மே 2016 (21:45 IST)

கருத்துக் கணிப்பில் அதிமுக முன்னிலை: புதிய தலைமுறை தகவல்

புதிய தலைமுறை மற்றும் ஏபிடி நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக கணிப்பில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.


தேர்தலுக்கு 7 நாட்களே உள்ள நிலையில் புதிய தலைமுறை மற்றும் ஏபிடி நிறுவனம் சேர்ந்து தேர்தல் முடிவுக்கு முன் உதாணமாக கருதப்படும் தேர்தல் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
 
மக்கள் விரும்பும் முதல் வேட்பாளர் யார்?
 
ஜெயலலிதா - 39.66%
கருணாநிதி - 31.89%
விஜயகாந்த - 8.59%
அன்புமணி - 5.03%
சீமான் - 2.40%
 
கருத்துக் கணிப்பில் மக்கள் விருப்பும் வேட்பாளர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மக்கள் அளித்துள்ள பதிலை வைத்து மேலே சதவிதம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதலிடத்திலும், கருணாநிதி இரண்டாவது இடத்திலும், விஜயகாந்த மூன்றாவது இடத்திலும், அன்புமணி நான்காவது இடத்திலும், சீமான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
 
இதைதொடர்ந்து அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக கருதப்பட்ட மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் வெறும் 8.59% பெற்று எப்பொதும் போல் மூன்றாவது இடத்தில் உள்ளார். 
 
இதையடுத்து ஒன்றுமில்லாதவராக கருதப்பட்ட சீமான், அன்புமணிக்கு அடுத்த இடத்தில் உள்ளது அரசியலில் அவருக்கான இடத்தை பிடித்திருப்பதைக் குறிக்கிறது.
 
மேலும் மக்கள் நலக் கூட்டணி, விஜயகாந்துக்கு சாதகமானதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 26.76 % மற்றும் இல்லை என்று 58.05 % பதில்கள் 
கிடைத்துள்ளது.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்