ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 20 மே 2016 (18:05 IST)

அதிமுக கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு

அதிமுக கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு

அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக  அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 

 
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் 132 பேர் வருகை தந்தனர். கூட்டம் தொடங்கியதும், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக  அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டார்.
 
இதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்று பலத்த கரவொலி எழுப்பினர். புரட்சித்தலைவி அம்மா வாழ்க என வாழ்த்துக்கோஷங்கள் எழுப்பினர்.