1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 13 மே 2016 (12:58 IST)

திமுகவில் ஐக்கியமான அதிமுக பெண் மேயரின் தந்தை

திமுகவில் ஐக்கியமான அதிமுக பெண் மேயரின் தந்தை

அதிமுக பெண் மேயரின் தந்தை திடீரென திமுக-வுக்கு தாவியுள்ளார்.
 

 
ஈரோடு மாநகராட்சி அதிமுக பெண் மேயராக இருப்பவர் மல்லிகா பரமசிவம். இவரது தந்தை ஜெகன்னாதன் தீவிர   அதிமுக தொண்டராக பணியாற்றி வந்தவர். எம்ஜிஆர் காலத்து அதிமுக பிரமுகர். அதிமுகவில் பல்வேறு பதவிகளை வகித்துவந்தார்.
 
இந்த நிலையில்,  அதிமுக பெண் மேயரின் தந்தை ஜெகநாதன் நேற்று மாலை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் திடீரென சந்தித்து திமுகவில் ஐக்கியமானார்.
 
ஜெகநாதன் செயலால் ஈரோடு அதிமுக மேயர் மல்லிகா பரமசிவம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.