வியாழன், 25 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 19 மே 2016 (14:20 IST)

எம்.ஜிஆர். சிலைக்கு பால் அபிசேகம்

எம்.ஜிஆர். சிலைக்கு பால் அபிசேகம்
அதிமுகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிசேகம் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
அதில் 135 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் அதிமுக கட்சியின் வெற்றி உறுதியாகியது.இதையடுத்து அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிசேகம் செய்து வழிப்பட்டனர்.
 
மேலும் அதிமுக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் என்று மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.