1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:59 IST)

ஓவியா ஆர்மி போயாச்சு..அடுத்து ரைசா நேவி - தெறிக்கவிடும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவின் மனமாற்றத்தை தொடர்ந்து,  அவர் பெயரில் ரைசா ஆர்மி மற்றும் ரைசா நேவி என நெட்டிசன்கள் கலக்கி வருகின்றனர்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது நடவடிக்கை காரணமாக பலரின் மனதையும் அள்ளினார் ஓவியா. அதனால், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதேபோல்,  அந்த நிகழ்ச்சியில் உள்ள ஜூலி, காயத்தி ஆகியோர் ஓவியாவிற்கு எதிராக செயல்பட்ட போதும், அவரை அழ வைத்த போதும், ஓவியா ஆர்மி, ஓவியா பேரவை எனத் தொடங்கி அவருக்கு ஆதரவாகவும், காயத்திர், ஜூலி ஆகியோருக்கு எதிராகவும் சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துகள் மற்றும் மீம்ஸ்களை அள்ளித் தெளித்தனர். 
 
ஆனால், தற்போது ஓவியா வெளியேறிவிட்டார். அந்நிலையில், பரணி மற்றும் ஓவியா ஆகியோர் வெளியே சென்றதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை உணரத் தொடங்கியுள்ளார் ரைசா. அதை நினைத்து கண்ணீரும் விட்டார். தற்போது அவர் தன்னுடைய மற்றும் சக்தி, காயத்ரி, ஆரவ் ஆகியோரின் தவறுகளை உணர்ந்து முதிர்ச்சியாக பேசிவருகிறார். 
 
எனவே, ரைசா ஆர்மி மற்றும் ரைசா நேவி தொடங்குவோம் என நெட்டிசன்கள் வேடிக்கையாக இணையத்தில் கருத்து பதிந்து வருகின்றனர்.  ஒருவேளை தொடர்ச்சியாக ரைசாவின் நடவடிக்கை ரசிகர்களை கவர்ந்தால் அவருக்கும் நெட்டிசன்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.