1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (16:17 IST)

பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய ஜூலியின் பிரியாவிடையை பற்றி ட்வீட் செய்த ஆர்த்தி!

இந்த வார எவிக்ஷனில் ஜூலி, ஓவியா, வையாபுரி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. வழக்கம்போல் ரசிகர்களின்  பேராதரவுடன் கடந்த 4 வாரங்களை போல் ஓவியாதான் வாக்குகளை அள்ளுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மன உளைச்சல் காரணமாக ஓவியா வெளியேறிவிட்டார்.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜூலி எலிமினேட் ஆனது ஓவியாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுவும் ஓவியா  விஷயத்தில் விளையாடிய விளையாட்டையும், அவரது போலித்தனத்தை ஆதாரத்துடன் தோலுத்துரித்து கமல் காட்டியதையும்  மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். அந்தளவுக்கு வெறுப்பை சம்பாதித்தார் ஜூலி.
 
ஜூலியின் வெளியேற்றம் குறித்து, ஆர்த்தி டுவிட்டரில் ரசிகர்களிடம் பேசுகையில் ‘கண்டிப்பா ஜுலி என்னிடம் வரமாட்டார்,  அப்படி வந்தாலும், அவருடைய நடிப்பை நான் நம்ப மாட்டேன் என்று அவருக்கே நன்றாக தெரியும்’ என்று கூறியிருந்தார்.

 
இந்நிலையில் தற்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் எத்தனை பேர் கவனித்தீர்கள், ஜூலி தனது பிரியாவிடை  உரையில், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடும்போது அந்த பட்டியலில் சுமார் இரண்டு பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அது நான் மற்றும் ஓவியா. பெருமைப்படுகிறேன்!! என்று பதிவிட்டுள்ளார்.