திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (09:45 IST)

எல்லோரும் பார்ப்பதால் தானே இப்படி? பார்க்காவிட்டால் ஓகேவா ஆரவ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை தவிர்ப்பது போல் நடந்து கொள்ளும் ஆரவின் நடவடிக்கைகளுக்கு ஓவியாவின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 

 
நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவிடம் காதல் வசப்பட்டது போல் ஓவியா நடந்து கொண்டார். இத்தனை நாள் வரை அவரிடம் நெருக்கமாகவும், அவரிடம் ஆறுதலாகவும் பேசி வந்த ஆரவ், தற்போது எல்லோரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதால், தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா கேரியர் பாதிக்கும் என திடீர் ஞானோதாயம் ஏற்பட்டு ஓவியாவை விட்டு விலக முயல்கிறார்.
 
இது ஓவியா ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. என்னை தொடாதே என ஓவியாவிடம் சொல்கிறார் ஆரவ். ஆனால், ஓவியாவை அவர் கைகளால் அரவணைத்துப் பிடித்திருக்கும் காட்சி மற்றும் ஓவியாவின் பின்புறம் ஆரவ் தனது காலால் உதைக்கும் புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு, இப்போது என்ன சொல்கிறாய் ஆரவ்? என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகிறார்கள் ஓவியாவின் ரசிகர்கள். 
 
மேலும்,  முன்பு ஒருமுறை ஆரவிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஓவியா கிளம்பும்போது, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன? என்ற பாடலை பாடி ரொமான்ஸ் செய்தவர்தான் இந்த ஆரவ் என அக்கு வேறாக பிரித்து அவரை இணையத்தில் வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள் ஓவியா ஆர்மியினர்.
 
அதேபோல், ஓவியா அவரிடம் காதல் வார்த்தை பேசி, கொஞ்சி குலவும்போது, எல்லோரும் பார்க்கிறார்கள் எனக் கூறி அவரை தவிர்க்க முயன்றார் ஆரவ். அப்படியெனில் அதுதான் பிரச்சனையா? யாரும் பார்க்கவில்லை எனில் பரவாயில்லையா ஆரவ்? எனவும் போட்டுத் தாளிக்கிறார்கள் நெட்டிசன்கள்...