திங்கள், 16 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (14:31 IST)

ஆரவை துவைச்சு காயப்போட்டு விடுவேன் - ஏன் கூறினார் ஜூலி?

ஆரவை துவைச்சு காயப்போட்டு விடுவேன் - ஏன் கூறினார் ஜூலி?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவிற்கு எதிராக ஜூலி பேசும் வீடியோவை விஜய் தொலைக்காட்சி இன்று புரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய போதே, ஆரவ் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது போலவே நடந்து கொண்டார் நடிகை ஓவியா. ஆனால், அவருக்கு பிடிகொடுக்காமல் ஆரவ் நடந்துகொள்ள, நாம் நல்ல நண்பர்களாக இருப்போம் என ஜாகா வாங்கினார் ஓவியா..
 
ஓவியாவின் மீது கோபமாக உள்ள ஜூலி, அவரின் பெயரை கெடுக்கும் வகையில் நடந்து கொண்டார். ஆனால், வீடியோ ஆதாரம் மூலம் அவர் கூறியது பொய் என நிரூபனமானது. இதனால், ஓவியாவிடம் முகம் கொடுத்து பேசாமல் இருந்து வருகிறார் ஜூலி.

ஆரவை துவைச்சு காயப்போட்டு விடுவேன் - ஏன் கூறினார் ஜூலி?

 

 
இந்நிலையில் இன்று ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ரைசாவிடம் பேசிக் கொண்டிருக்கும் ஜுலி “ஆரவ்க்கு பெரிய மைனஸே ஓவியாவிடம் நெருங்கி பழகுவதுதான். அவன் மட்டும் வேறு எதாவது செய்யட்டும். அவனை துவச்சி காயப்போட்டுருவேன்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
இன்றைய நிகழ்ச்சியில் இது தொடர்பான முழு காட்சிகள் ஓளிபரப்பப்படும் எனத் தெரிகிறது.