வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (15:01 IST)

கன்னி: ஆனி மாத ராசி பலன்கள் 2022

Kanni
கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சனி(வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், குரு - அஷ்டம ஸ்தானத்தில் சுக், ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது.


பலன்:
மற்றவர்களிடம் பிரியமாக நடந்து கொள்ளும் குணமுடைய கன்னி ராசியினரே நீங்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் சஞ்சாரத்தால் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். தொழில் வியாபாரத்திற்கு புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதேநேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.  அவர்களது  முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

பெண்களுக்கு  பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு ராசிநாதன் புதனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.

அரசியல்துறையினருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

மாணவர்களுக்கு  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

உத்திரம் - 2, 3, 4:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.

ஹஸ்தம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வீண் எதிர்ப்புகள் விலகும்.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

சித்திரை - 1, 2:
இந்த மாதம் வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.  தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

பரிகாரம்:  பெருமாளை வணங்கிவர வாழ்வு வளம் பெறும். மாணவர்களுக்கு தேர்வு பயம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 17, 18; ஜூலை 14, 15.