திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 18 நவம்பர் 2021 (17:41 IST)

ரிஷபம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - உழைப்பின் தன்மை தெரிந்த ரிஷப ராசியினரே இந்த மாதம் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும். காரிய தடைகள் நீங்கும். திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்க தூண்டும். கடன் தொல்லை குறையும். 

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத தடைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்த சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வாழ்க்கை துணையின் எண்ணப்படி பொருட்கள் வாங்க நேரும்.  கணவன்-மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். 
 
பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் பல தடைகளையும் தாண்டி கல்வியை கற்று வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். 
 
கார்த்திகை 2, 3, 4:
தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
 
ரோகிணி:
எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். 
 
மிருக சிரீஷம் 1, 2:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் ராஜ ராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்கவும், சுக்கிர பகவானுக்கு மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு வழங்கினால் மனது மகிழும் படியான அளவில் காரியங்கள் நடக்கும். கடன் பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: டிசம் 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்:  நவம் 20, 21.