வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (17:25 IST)

விருச்சிகம்: ஆனி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: ராசியில் சந்திரன், குரு(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ), கேது - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில்  சூரியன், செவ்வாய், புதன், ராகு போன்ற கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
அடுத்தவரை பற்றி எந்த பேச்சும் பேசாமல் இருப்பது நல்லது என்ற எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும்  கவனமாக  செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த  காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.  வாக்கு நாணயம் உண்டாகும். முக்கிய நபர்கள் நட்பு கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
 
குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து  கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத் தில் மன நிறைவு  காண்பீர்கள்.  எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் கையாளும் பொருள்களை  பாதுகாப்பாக  வைப்பது நல்லது. எதையும் தக்க சமயம் பார்த்து பேசுவது உகந்தது.
 
கலைத்துறையினர் பிறர் விசயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மூத்த கலைஞர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கினால் அதை  ஏற்றுக்கொள்வது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.
 
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தொண்டர்களுடான கருத்து வேறுபாடு மறையும். சின்ன சின்ன விசயங்களுக்காக மாற்று  கருத்துகள் தோன்றி மறையும். எதிர்கள் கட்டுக்குள் இருப்பார்கள்.
 
பெண்களுக்கு  மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
 
விசாகம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல்  இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும். 
 
அனுஷம்:
 
இந்த மாதம் பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும்  ஆர்வமும் இல்லாமல் சலிப்பு ஏற்பட்டாலும் எந்த வித பாதிப்பும் உண்டாகாது. 
 
கேட்டை:
 
இந்த மாதம் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும்.  யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
 
பரிகாரம்: சுப்பிரமணிய சுவாமிக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 25, 26, 27.