கடகம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Kadakam
Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (13:43 IST)
கிரகநிலை: தைரிய, வீர்ய ஸ்தானத்தில்   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண,  ருண ஸ்தானத்தில் சனி , கேது -  லாப  ஸ்தானத்தில்   சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம்  வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
கடல் கடந்து பயணிக்க ஆசைப்படும் கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் நேரமிது.  சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். 
  
குடும்பத்தில் எதைத் தொட்டாலும் வெற்றிக்கனியை ருசிப்பதை இந்த கிரக அமைப்பு காட்டுகிறது. குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள்  நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள்  அகன்று நிம்மதி பிறக்கும். உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும்.
 
தொழிலில் வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள்.  உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். விளை  பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும்.
 
உத்தியோகஸ்தர்கள் உங்களது நேர்மையான முன்னேற்றம் எந்த தடங்கல்கள் வந்தாலும் சாதிப்பீர்கள். உங்களது தெய்வ பலம் அத்தனை  எதிர்ப்புகளையும் சமாளிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.  வேலையில் குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும்.
 
பெண்கள் பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.  அரசல் புரசலாக தங்களை கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வர். பாகப் பிரிவினை விஷ்ய பஞ்சாயத்துகள்  பைசல் ஆகும். பிதுரார்ஜித சொத்துக்கள் சிலருக்கு அமையும். 
 
கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.   திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக  தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
 
அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும்  உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய  சூழ்நிலை காணப்படும். மாணவர்கள்  அடுத்தவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாரையும் ஒப்பிட்டு பேச வேண்டாம். பெரியோர்களுக்கு  மரியாதை கொடுங்கள்.
 
புனர் பூசம் 4ம் பாதம்:
 
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு  பிரிந்து வெளியில் தங்க நேரலாம். வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை  தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள்.
 
பூசம்:
 
இந்த மாதம் அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. குடும்ப கஷ்டங்கள் நீங்கும்.  தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல்,  வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு  கூடுதல் நேரம் ஒதுக்குவது நல்லது.
 
ஆயில்யம்:
 
இந்த மாதம் எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை  உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். புத்தி  கூர்மையுடன் செயல் படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த பிரச்சனைகள் சாதகமான முடிவு  பெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
 
பரிகாரம்:
 
அம்பாள் வழிபாடு செய்து வாருங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 30, 31


இதில் மேலும் படிக்கவும் :