சிம்மம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

Simmam
Last Modified சனி, 19 அக்டோபர் 2019 (14:41 IST)
கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில் சூர்யன்,  புதன்(வ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம  ஸ்தானத்தில் சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
தீராத பிரச்சினைகளுக்கெல்லாம் வழி கண்டறிய  முயற்சி செய்யும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் சில மாற்றங்கள் வந்து சேரும்.  அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும்.
 
குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக  இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.  உலக வாழ்க்கை யோக  வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு  அதிகரிக்கும்.
 
தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். வியாபாரம் அபிவிருத்தி அடையும். கூட்டு வியாபாரம்  செய்பவர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.
 
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய  பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும்.  உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள்.
 
பெண்கள் சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து  விடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. சாப்பிட நேரமில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். தக்க நேரத்தில் உணவருந்துங்கள்.
 
கலைத்துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகளும் பெருடவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.
 
அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். வீண் செலவு,  சிறு பிரச்சனைகள் உண்டாக நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. 
 
மாணவர்கள் மாணவர்களுக்கு கேளிக்கையில் நாட்டம் அதிகரிக்கும்.  தந்தை, தாய் இவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உங்களின்  மனதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்வார்கள். 
 
மகம்:
 
இந்த மாதம் கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல்  அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள்.  தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.  பணவரத்து இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 
 
பூரம்:
 
இந்த மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்  பயணங்களின் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். ஆடை, ஆபரணங்கள்  சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.
 
உத்திரம் 1ம் பாதம்:
 
இந்த மாதம் . பொருளாதாரம் மேம்படும். தைரியம் உண்டாகும். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான  பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள்  தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் அதிகரிக்கும்.
 
பரிகாரம்:
 
தினமும் சிவன் கோவிலுக்குசென்று, தீபமேற்றி  பாலாபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 9,10
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 1, 2, 3.


இதில் மேலும் படிக்கவும் :