வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (12:39 IST)

மிதுனம் ராசிக்கான ஆடி மாத பலன்கள்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)



சாமர்த்திய மிதுனம் என்பதற்கேற்ப எந்த செயலிலும் தங்களது நல்ல சாதுர்ய குணத்தை வெளிப்படுத்தும் குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே

இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி, மற்றும் மார்புத் தொல்லை ஏற்பட்டு அகலும். திருமண பாக்கியம் கை கூடும். இறையருளும், நம்பிக்கையும் கூடும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். கணவன், மனைவியிடையே அன்பும், பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள். தாயாருடன் இருந்து வந்த மனக்கசப்பு மறையும். மனைவி வழியில் லாபம் உண்டு.
உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் ஒப்பந்தங்கள் நிறை வேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் திறமையில் இருந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் குறையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். செய்யும் வேலையில்  மனநிம்மதி உண்டாகலாம்.

தொழிலதிபர்கள் தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். தந்தை வழி தொழில் செய்வோருக்கு அதிக லாபம் ஏற்பட வாய்ப்புண்டு.பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். யாருடனும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

கலைஞர்கள் கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள். உடனிருப்போரால் பிரச்சனை தோன்றி மறையலாம். சீராக வாழ்க்கை ஓடுவதாக தெரிந்தாலும் அவ்வப்போது குழப்பமான நிலையும் நிலவும்.அரசியல்வாதிகள் சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல் படுவது உங்களுடைய எதிர்கால வாழ்வுக்கு உறுதுணையாக அமையும். தூர தேசப் பிரயாணம் ஏற்படும் ஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: புதன் தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி