வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஜூலை 2018 (12:37 IST)

ரிஷப ராசிக்கான ஆடி மாத பலன்கள்

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)



எருது துரிது என்பதற்கேற்ப எதிலும் அவசரகதியில் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே,

இந்த மாதம் இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். எடுத்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது மிகச் சிறப்பானதாய் அமையும்.

குடும்பத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அன்னியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கண்வன், மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்று சேரும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரணை உங்களுக்கு இருந்து கொண்டிருக்கும். எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைத்து அதன் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.

தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்கள், உங்களை நம்பிக் காத்திருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் போடும் திட்டம் உங்களுக்கு இடையூறாக இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

பெண்கள் பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். அதனால் மன வேதனை தான் ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் தொந்தரவு ஏற்படும். பணிக்குச் செல்லும் பெண்கள் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்று நிம்மதிப் பெருமூச்சடைவீர்கள்.ஆதலால் வேலைப்பளு குறையும்.கலைஞர்கள் கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பணம் கிடைக்காது. உடனிருப்போரால் பிரச்சனைகள் வரலாம். தியானம் மேற்கொண்டு மன அமைதியைப் பெறுங்கள். புதிய யுக்திகளை கையாண்டு வருவீர்கள்.

அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மூத்த அரசியலமைப்பாளர்கள் உங்களுடைய பிரச்சனைகளை காது கொடுத்து கேட்டு முடித்து வைப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களை இன்பக் கடலில் ஆழ்த்தும். மற்றவர்கள் பொறாமைப் படும் அளவுக்கு வேலையைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பர். ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெற்று சக மாணவர்களுடன் போட்டியிடுவீர்கள். பெற்றோர்களின் ஆசி கிட்டும். பொழுதுபோக்கு, கேளிக்கை நிகழ்ச்சிக்கு சென்று வர மகிழ்ச்சியும் உண்டாகும்.

பரிகாரம்: வியாழக் கிழமை தோறும் சிவன் கோவிலை மூன்று முறை வலம் வாருங்கள். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி