திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (17:53 IST)

துலாம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது -  சுக  ஸ்தானத்தில் சனி (வ) -  பஞ்சம ஸ்தானத்தில் குரு (அதி. சா)  - அஷ்டம  ஸ்தானத்தில் புதன், ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
தன் சொந்த காலில் நிற்க ஆசைப்படும் துலா ராசியினரே நீங்கள் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு துணை நிற்பவர். இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை தரும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில்  சாதகமான நிலை காணப்படும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும்.  போட்டிகள் குறையும்,  புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான  அலைச்சல் குறையும்.
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான  போக்கு காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையில் இருந்த  மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின்  எதிர்கால  நலன் குறித்து கவலை உண்டாகலாம். 
 
பெண்களுக்கு வீண்செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். 
மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றத்திற்கு  இருந்த  முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 
 
கலைத் துறையினருக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய் விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம்  குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். 
 
அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள்  விலகிச்செல்வார்கள்.
 
சித்திரை:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். தூக்கம்  இல்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையைத் தரும்.
 
ஸ்வாதி:
இந்த மாதம் தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.
 
விசாகம்:
இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்துவந்த நோய்  விலகும். அதனால் ஏற்பட்ட மனபாரம் குறையும். வரக்கூடிய உபரி வருவாயால் கடன் அடைபடும். தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகள் வந்துசேரும்.
 
பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லி தினமும் லக்ஷ்மியை வணங்கி வர கடன் பிரச்சனை குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்: 29, 30.