ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (17:45 IST)

கடகம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021

(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) - கிரகநிலை: ராசியில்  சந்திரன், செவ்வாய் -  பஞ்சம  ஸ்தானத்தில் கேது -  களத்திர  ஸ்தானத்தில் சனி (வ) -  அஷ்டம   ஸ்தானத்தில் குரு (அதி. சா)  - லாப  ஸ்தானத்தில் புதன், ராஹூ -  அயன சயன போக  ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
எடுக்கும் கடமைகளுக்கு முக்கியவத்துவம் அளிக்கும் கடக ராசியினரே இந்த மாதம் எதிலும் லாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல்  ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். 

புதிய வீடு மனை வாகனம் வாங்குவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தின் மூலம் வீடு வாகனங்களை வாங்குவதற்கு  இருந்து வந்த தடைகள் அகலும்.
 
தொழில் வியாபாரம் விருத்தியடையும்.  தடைபட்ட நிதி உதவி கிடைக்கும்.  ஏற்கனவே  வரவேண்டி இருந்து  வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும்.
 
குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பழைய வீட்டை புதுப்பிப்பார்கள். வாகனம் மூலம்  ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பம் சார்ந்த  விஷயங்களில் கலந்துரையாடும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது நன்மை தரும்.
 
பெண்களுக்கு  மனக்குழப்பம் தீரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு  மிக கவனமாக  பாடங்களை படித்து கூடுதல் மதிப் பெண் பெற முயற்சி செய்வீர்கள்.  தேவையான உதவிகள் கிடைக்கும். 
 
கலைத்துறையினருக்கு நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம்  மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
 
அரசியல் துறையினருக்கு நல்ல பெயர் வாங்குவீர்கள். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும்.  அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
 
புனர்பூசம்:
இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
 
பூசம்:
இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து  திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
 
ஆயில்யம்:
இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில  வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.
 
பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் அம்மன் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்: 23, 24.