திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (14:33 IST)

சிம்மம்: மார்கழி மாத ராசி பலன்கள்

(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: சுகஸ்தானத்தில் கேது, சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  சனி,சூர்யன், புதன், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும்.  எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு  வெளியில் தங்க நேரிடும். 
 
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து  விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம்  எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில்  சாதகமான நிலை காணப்படும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது. உடல்நலனைப் பொறுத்தமட்டில்  உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.
 
பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். 
 
மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.  பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
 
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும்  மந்தமாக நடக்கும்.
 
மகம்:
இந்த மாதம்  பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம்  ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும்.
 
பூரம்:
இந்த மாதம் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள்  விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே  கவனமாக இருப்பது நல்லது.
 
உத்திரம்:
இந்த மாதம் நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். 
 
பரிகாரம்:  அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்:  டிசம்பர் 15, 16; ஜனவரி 11, 12, 13.