ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: புதன், 16 டிசம்பர் 2020 (13:27 IST)

மேஷம்: மார்கழி மாத ராசி பலன்கள்

(அசுபதி, பரணி, கிருத்திகை 1 பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். வேலையில் உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். இருக்கும்  இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும்.
 
குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும்  வரலாம். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்   சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர்  பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள்  வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர  முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக  எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.
 
பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது  நல்லது.
 
மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும்  செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது
 
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும். 
 
அசுபதி:
இந்த மாதம்  நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும்.  போட்டிகள் குறையும்.   பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.  உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.  
 
பரணி:
இந்த மாதம்  வீண் ஆசைகள் தோன்றலாம் கட்டுப்படுத்துவது நல்லது. திட்டமிட்டு செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு  அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு  நடக்க வேண்டி இருக்கும். 
 
கார்த்திகை:
இந்த மாதம் பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.  துணிச்சலாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்ப்புகள்  நீங்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். 
 
பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:  செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 3, 4.