வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:45 IST)

சிம்மம்: ஆவணி மாத ராசி பலன்கள்

(மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் புதன், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - லாப  ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன் - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
 
பலன்:
பெரியோர்களின் ஆசிகளைப் பெற்று வாழ்வில் சாதனைகள் புரியும் சிம்மராசியினரே நீங்கள் எதிர்ப்பவர்களை தக்க சமயத்தில் வெற்றி கொள்வீர்கள். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தனஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கும் புதனால் பொருளாதாரம் மேலோங்கும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய  மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள்.
 
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
 
மகம்:
இந்த மாதம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.   கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். 
 
பூரம்:
இந்த மாதம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து  முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின்  சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
உத்திரம்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. 
 
பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த  காரியம் நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சூரியன், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 4, 5 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 28, 29.