1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:26 IST)

மகரம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில்  இருந்த சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

அக்டோபர் 3 ந்தேதி பாக்கிய ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தொழில் ஸ்தானத்தில் இருந்த குருபகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி  தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: வாக்குவாதங்களை தவிர்த்து காரியத்தில் கவனமாக இருக்கும் மகர ராசி அன்பர்களே!  இந்த மாதம் குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை  வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வது நல்லதுபிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.
 
குடும்பஸ்தானாதிபதி சனி பகவான் விரையஸ்தானத்தில் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் திருமணம் தொடர்பான பேச்சுகள்  வரும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவையில்லாமல் வார்த்தைகளை விட வேண்டாம். அது குடும்பத்தில் கலகத்திற்கு வழி வகுக்கும்.
 
தொழில் ஸ்தானத்தில் குரு, புதன், சுக்ரன் என நல்ல கிரகங்களின் கூட்டமைப்பு இருப்பதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாளாக தொழிலை விரிவுபடுத்த எண்ணியிருந்தது இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
 
உத்யோகத்தில் புதிய வேலைகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் ஊதியம் உயரும். பெண்களுக்கு வரவேண்டிய பணம்  வந்து சேரும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். கணவனுடன் நல்ல இணக்கமான உறவு இருக்கும். மாணவர்களைப் பொறுத்த வரை  தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான காலமாக இருக்கும். உபகரணங்கள், உதவித்தொகை என அனைத்தும் கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து  காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.
 
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள்  செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம். 
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும்.  ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.
 
திருவோணம்: இந்த மாதம் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல்  ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
 
அவிட்டம் 1,2 பாதம்: இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.   மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது  நல்லது.
 
பரிகாரம்: முருகன் கோவிலுக்குச் சென்று வர வார்த்தைகளில் கவனம் அதிகரிக்கும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6, 7.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 30; அக்டோபர் 1.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி.