வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 20 செப்டம்பர் 2018 (14:44 IST)

கன்னி: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு அயன, சயன ,விரய  ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 

அக்டோபர் 3 ந்தேதி ராசியில் இருந்த புதன் பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு  பெயர்ச்சி ஆகிறார். மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த குருபகவான் தைரிய, வீர்ய  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி  ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: புதிய வேலையை  திட்டமிடுவதில் வல்லவராக திகழும் கன்னி ராசி அன்பர்களே!   இந்த மாதம் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.தொழில்  வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.
 
ராசிக்கு குடும்பாதிபதியான சுக்கிரன் அவருடைய சொந்த ராசியிலேயே ஆட்சி பலம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பங்காளிகள் பிரச்சினைகள்  முடிவுக்கு வரும். இளைய சகோதரர்கள் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம்  உண்டாகும்.
 
தொழிலைப் பொறுத்தவரையில் ஆதாயம் அதிகமாக கிடைக்கப் பெறுவீர்கள். சிறு வியாபாரம் செய்பவர்கள் கூட நல்ல உன்னதமான நிலையை எட்டுவீர்கள். உங்கள் தனாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் பணவரவு தாராளாக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க  வேண்டிவரும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு ஆதாயத்தைத் தரும். அதிகாரிகளுக்கு நல்ல சன்மானம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
பெண்கள் சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரலாம். உடன்பிறந்தவருக்கு உதவி செய்வீர்கள்.பிள்ளைகள் விசயத்தில் நற்செய்திகள் வரும். மாணவச் செல்வங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உற்சாகமான பணிகளில் ஈடுபடுவீர்கள். கல்வி அல்லாத பிற துறைகளிலும் சாதிக்க முயலுவீர்கள். கலைத்  துறையினருக்கு அனுகூலமான தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நன்மதிப்பும், மரியாதையும் கிட்டும். பல மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம்.  உங்களுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பலவழிகளிலிருந்தும் பண வரவுகள் வரலாம்.
 
அரசியல்வாதிகள் மூத்த தலைவர் ஒருவரால் நீங்கள் புகழப்படுவீர்கள். உடனிருப்போரின் தகுந்த ஒத்துழைப்பை பெற முயற்சிப்பீர்கள். தகுந்த கவனத்துடன் செயல் படுங்கள் ஆதாயம் கிட்டும்.
 
உத்திரம் 2, 3, 4 பாதம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும்.
 
அஸ்தம்: இந்த மாதம் குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்கும்.
 
சித்திரை 1, 2, பாதம்: இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
 
பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வணங்கி சுந்தர காண்டம் படியுங்கள்.
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27, 28, 29.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.